Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள் …. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |