கொண்டை ஊசி வளைவில் சிக்கிய லாரியை நீண்ட நேரம் போராடி திருப்பியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் திம்பம் மலைப்பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், செல்கின்றது. இந்நிலையில் இந்த மலைப்பாதையில் அமைந்துள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரி திடீரென ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்று விட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் நீண்ட நேரம் போராடி லாரியை வளைவில் இருந்து திரும்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.