அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீப் பற்றியதால் அணைக்கும் முயச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷோர்ஸ் தீவில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த கப்பலில் வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் போர்ஷே, அவுடி, பென்ட்லிட்ரிப் உள்பட சுமார் 4000ம் கப்பல்கள் இருந்தன. இதனை தொடர்ந்து கப்பலில் இருந்து 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தீயை அணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் கப்பலில் உள்ள மின்சார கார்களின் லித்தியம் பேட்டரியில் தீப்பற்றி மளமளவென எரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் இழுவை படகுகள் களமிறக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த படகுகள் கப்பலில் எரியும் தீயை அணைப்பதற்கு தண்ணீரை பீச்சி அடித்து வருகின்றனர்.