Categories
உலக செய்திகள்

சரக்கு குடிப்பவர்களுக்கு… வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு சில முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மது அருந்தினால் தடுப்பு மருந்து வேலை செய்யாது. மேலும் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ரஷ்யா மட்டுமன்றி மற்ற நாடுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ள தடுப்பு மருந்துகளுக்கும் இது பொருந்தும். அதிலும் குறிப்பாக இரண்டு மாதங்கள் குடிக்காமல் இருந்தால் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |