தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது இந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் முகம் சுளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது இதனால் இவரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகின்றார்கள்.
Avan fans lam indhu pakkule pola : #biggbosstamil6 #asalkolaru #asalkolar #asal https://t.co/lQhjrv6WGp pic.twitter.com/vNgT6BpIDP
— #you (@vibe_yourself) October 24, 2022
இந்த நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கினால் சர்ச்சையில் சிக்கும் நபரின் ஜாதகத்தையே சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி விடுகின்றார்கள் என்பதை நாம் பலமுறை தெரிந்திருக்கின்றோம். அந்த வகையில் தற்போது அசல் கோளாறின் வேறொரு முகத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் சிகரெட் பிடிப்பது, சரக்கு அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் அசல் கோளார் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.