500 ரூபாய் பணம் தராத காரணத்தினால் வழிப்பறி கும்பல் கணவனை அடித்துப்போட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்திலுள்ள பாகல்பூரில் கடந்த சனிக்கிழமை இரவு இருபத்தி ஐந்து வயதுடைய பெண்ணும், அவருடைய கணவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தரமுடியாது என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் கணவனை அடித்து உதைத்து ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று போட்டுவிட்டு, அவரின் மனைவியை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த பெண் ஒரு வீட்டினுள் தஞ்சமடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உணவு ஆடை கொடுத்த அப்பகுதியினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர். அதன்படி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.