திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் பாஜக சார்பாக டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யபட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜ அவர்களை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். இருப்பினும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெற்றது.
மதுபானக்கடையை தமிழகத்திற்கு கருணாநிதி கொண்டு வந்தார். இதனால்தான் அவனவனுக்கு தனக்குப் பிள்ளைகள் பிறக்க முடியாமல் போய்விட்டது. மதுபானக்கடைகளை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க முதல்வர் முன்வர வேண்டும். அதிமுகவில் உள்ள குழப்பத்திற்கு சசிகலா மீண்டும் அரசியலில் நுழைவதற்கும் பாஜக கட்சி ஒரு காரணமாக உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, திருமாவளவனே எப்போது குழப்பத்தில் தான் இருப்பார். யார் அந்த திருமாவளவன் சரக்கு மிடுக்கு பேச்சுக்காரன் தானே. மேலும் அவர் ஒரு சமூக விரோதி என்று கூறியுள்ளார்.