Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த 2,400 டன் தீவனம்…. கோழிப் பண்ணைகளுக்கு விநியோகம்…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,400 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று சுமார் 2,400 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையத்திலிருந்து 120 சரக்கு லாரிகள் மூலம் தீவனங்கள் கோழி பண்ணைகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Categories

Tech |