சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு 2600 டன் பருப்பு மூட்டைகள் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டிற்க்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருப்பு, கோதுமை, சிமெண்ட், உரமூட்டை உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் மார்க்கெட்டிற்க்கு சரக்கு ரயில் மூலமாக 2600 டன் பருப்பு மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலிருந்தும் 700 டன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் இருந்து பருப்பு மற்றும் உர மூட்டைகளை இறக்கி லாரியில் ஏற்றினர். மேலும் லாரியில் ஏற்றப்பட்ட இந்த மூட்டைகள் சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.