சரக்கு ரயில்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குவதற்கு திண்டுக்கல்லில் உள்ள தண்டவாளங்களை மாற்றியமைப்பதற்கு ஆய்வு நடந்தது.
நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியூர் பயணத்திற்கும், நீண்ட தூரம் பயணம் செல்வதற்கும் ரயிலை தான் தேர்வு செய்கின்றார்கள். இதற்காக பாசஞ்சர் ரயில், அதிவிரைவு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகின்றன. அதேபோன்று சரக்குப் போக்குவரத்திலும் ரயில்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நிலக்கரி, உரம், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சரக்கு ரயில்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.
இந்த சரக்கு ரயில் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சரக்குகளை விரைவாக கொண்டு செல்வதற்கு வசதியாக சரக்கு ரயிலின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ரயில் நிலையங்களை கடந்து செல்கின்ற போது சரக்கு ரயில் வேகம் குறைந்துள்ளது. இதற்காக ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களை வழக்கமான ஜல்லி கற்களை கொண்டு செய்யாமல் சிமெண்ட் தளத்தில் அமைக்கப்பட்டு இருப்பதுதான் காரணம் இருந்தது. அதில் சரக்கு ரயில் வேகமாக செல்வதால் அதிர்வுகள் ஏற்பட்டு சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒருசில தண்டவாளங்கள் ஜல்லி கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 6 தண்டவாளங்கள் இருக்கின்றன. அதில் 5 தண்டவாளங்கள் சிமெண்டு தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தண்டவாளம் மட்டும் ஜல்லி கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திண்டுக்கல் வழியாக ஏராளமான சரக்கு ரயில்கள் செல்கிறது. இதன் காரணமாக சிமெண்ட் தளத்தில் உள்ள இரண்டு தண்டவாளங்களை ஜல்லி கற்கள் மீது மாற்றியமைக்க உள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் வழியாக சென்ற சரக்கு ரயில்கள் 80 கிலோ மீட்டரில் இருந்து 90 கிலோ மீட்டர் வரை அதிவேகத்தில் இயங்க முடியும். இதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது.