உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 10 ஆயிரத்து 110 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகர் பகுதியில் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வண்டியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜாராம் என்பவர் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 10 ஆயிரத்து 110 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்தப் பணம் தனியார் நிறுவன ஊழியர் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.