Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுல இவங்கள கண்டிப்பா ஏற்றக்கூடாது… விதிமுறையை மீறினா அவ்ளோதான்… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை..!!

நாகையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

சென்னை போக்குவரத்து ஆணையர் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி நாகை மாவட்டத்தின் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரவீன் நாயர் அனைத்து சரக்கு வாகனங்களிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பெயரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட நாகூர் கீழ்வேளூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் சரக்கு வாகனங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.

இதில் அலுவலர்கள், வாகன ஆய்வாளர் பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர். கனரக சரக்கு வாகனம் மற்றும் இலகுரக சரக்கு வாகனம் ஆகிய வாகனங்களின் முகப்புகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல அனுமதி கிடையாது. அதனை மீறினால் சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

Categories

Tech |