சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காளிகுளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் இருந்து பெருந்துறைக்கு தக்காளி ஏற்றி செல்வதாக விவேக் தெரிவித்துள்ளார். இதனால் தார்ப்பாயை அகற்றி தக்காளியை காட்டுமாறு போலீசார் கூறியுள்ளனர்.
அப்போது விவேக் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் வாகனத்தில் ஒரு பெட்டியில் 20 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் சரக்கு வேன் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற விவேக்கை அதிரடியாக கைது செய்தனர்.