Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனம் மீது மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மெட்டுவாவி பகுதியில் விவசாயியான நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வாகனத்தில் சிக்கலாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது கோவை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Categories

Tech |