கும்பகோணத்தில் மது வாங்க பணமில்லாத காரணத்தால் மூன்று மாதங்களாக சானிடைசர் குடித்து வந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மது பிரியர் கர்ணன் என்பவர் மதுபானம் வாங்க பணமில்லாத காரணத்தால் தினமும் சானிடைசரை குடித்து வந்துள்ளார். அவர் மூன்று மாதங்களாக தொடர்ந்து தினந்தோறும் மூன்று பாட்டில் சனிடைசர் குடித்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.