Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோதிய டிராக்டர்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சியில் பாண்டிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வேணில் அதே பகுதியில் வசிக்கும் 4 பேருடன் மணப்பாறைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை- விராலிமலை சாலை நவம்பட்டி அருகே சென்ற போது மூக்கையா என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூக்கையா(82), பாண்டி மணி(29), கருப்பையா(75) மதி(42) ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |