தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள் சாலையில் சாய்ந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடை பெற்றுக் கொண்டிருகின்றன. அந்த வகையில் மேடவாக்கம் சோளிங்கநல்லூர் இடையேயான சாலையின் நடுவில் மெட்ரோ ரயில் பணிக்காக 60 அடி உயரத்திற்கு தூண்கள் அமைத்து இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாலையை நோக்கி சாய்ந்து விழுந்துள்ளது.
அந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து போலீசார் ஊழியர்களைக் கொண்டு ராட்சத கிரைனை வரவழைத்து சாலையில் சாய்ந்த இரும்பு கம்பிகளை 4 மணி நேரத்தில் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.