Categories
உலக செய்திகள்

“சரணடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்கள் போல் நடத்தப்படுவார்கள்”…ஜெலன்ஸ்கி உறுதி… எச்சரிக்கை விடுக்கும் புதின்…!!!!

உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிர படுத்த ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய இராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் மூன்று லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷ்ய இராணுவம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை பின்பற்றாவிட்டாலோ, சண்டையிட மறுத்தாலோ, தானாக சரணடைந்தாலோ அவர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் என சட்டத்திற்கு அதிபர் புதின் ஒப்புதல் அளித்து இருக்கின்றார். அதே நேரம் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய வீரர்கள் சரணடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். அவ்வாறு சரணடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை போல் நடத்தப்படுவார்கள் என ரஷ்ய மொழியில் ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |