மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரைக்காரர்கள் போஸ்டருக்கு பேர் போனவர்கள். அதிலும் அரசியல், சினிமா என பல துறைகளிலும் வித்யாசமான போஸ்டரை ஒட்டி பரபரப்பை கிளப்பு வதில் பேர் போனவர்கள். அந்த வகையில் இன்று நகர் முழுவதும் தேர்தலில் சரத்குமார் ஏன் முதல்வராக கூடாது என்று கேள்விக்குறியுடன் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
இதை ஒத்த கடையை சேர்ந்த நீதிராஜன் என்பவர் அச்சிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் அதிமுக கட்சியில் இருந்து விலகிய சரத்குமார் இன்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.