Categories
அரசியல்

சரித்திரம் படைத்த வீரமங்கை வேலுநாச்சியார்… கடந்து வந்த பாதை….. பலரும் அறியாத வியக்கவைக்கும் தகவல்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். இவரது தந்தை செல்ல முத்து தேவர் மற்றும் தாயார் சத்தந்தி முத்தாத்தாள் ஆவார். இந்த தம்பதியினருக்கு 1730 ஆம் வருடம் பிறந்த பெண் குழந்தைதான் வேலுநாச்சியார். அரசு உரிமைக்கு ஆண் வாரிசை தான் அரசர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. எனினும் வேலுநாச்சியாரின் தந்தை பெண் குழந்தை பிறந்து விட்டது என மனமுடையவில்லை. தன் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள்வீச்சு, சிலம்பம், வளரி போன்ற போர்க்கள பயிற்சிகளை கற்றுக்கொடுத்தார். இருப்பினும் வேலுநாச்சியாருக்கு தாய் மொழியான தமிழை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என 6 மொழிகளை கற்றுக் கொடுத்தார்.

இதனிடையில் பெற்றோர் தன்னுடைய மகளுக்கு ஒரு வீரன்தான் கணவனாக வர வேண்டும் என்று நினைத்தனர். அதன்படி சிவகங்கை சீமையை ஆளும் முத்துவடுக நாதரை தன் மகளுக்கு ஏற்ற மணவாளர் என்பதை உணர்ந்து, இருவருக்கும் 1746-ல் திருமணம் முடித்துவைத்தனர். இதில் முத்துவடுக நாதருக்கும் வேலு நாச்சியாரின் வீரசெயல்கள் மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து வேலுநாச்சியாருக்கு பின் முத்துவடுக நாதர் கௌரி நாச்சியாரை மணந்தார். இதற்கிடையில் வேலுநாச்சியாருக்கு பிறந்த மகள் வெள்ளச்சி நாச்சியார் ஆவார். கடந்த 1780 ஆம் வருடம் பொதுமக்களின் வெற்றி முழக்கத்தோடும், வரவேற்போடும் 8 வருடங்களுக்குப் பின் தமது மண்ணில் காலடி பதித்தவர் வேலுநாச்சியார். மீண்டும் சிவகங்கைக்கு வேலுநாச்சியார் அரசி ஆனார். அதேபோன்று மருது சகோதரர்கள் மந்திரியானார்கள்.

வேலு நாச்சியார் அரசியானதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து வேலுநாச்சியாருக்கு 50வயது ஆன நிலையில், தன் மகளை சிவகங்கை சீமைக்கு அரசியாக்கினார். அதற்கு மருது சகோதரர்களும் ஆதரவு தெரிவித்தனர். மக்கள்சேவையில் வேலுநாச்சியார் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். வேலு நாச்சியார் பழைய கோவில் கோபுரத்தை அழகாக உயர்த்தி காட்டினார். இதனிடையில் முத்துவடுகநாதர் போரில் வீரமரணம் அடைந்தார். சிவகங்கை சீமை என்றாலே மருது சகோதரர்கள் பெயர்கள் பளிச்சிடும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இன்றி சிவகங்கை இல்லை என்றே கூறலாம். அதேபோன்று வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறும் இவர்கள் இன்றி முழுமைபெறாது. இதில் பெரியமருதுவுக்கு 19 வயதும், சின்னமருதுவுக்கு 15 வயது ஆன போது அவர்களை மொக்கை பழனியப்ப சேர்வை, சிவகங்கை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.

இதையடுத்து காட்டிற்குள் சென்றதும் ஒரு புலி மரத்தின் மீது இருந்தபடி அரசர் மேல் பாய, உடன் வந்த படைவீரர்கள் புலியின் சீற்றத்திற்கு பயந்து ஓடினர். அப்போது பெரியமருது புலியின் தலையை தாக்க, சின்ன மருது அதன் வாலை பிடித்து சுழற்றி வீசி எறிந்தார். இவர்களின் வீரத்தினை பார்த்த முத்துவடுக நாதர் பெரிய மருதுவை போர்படை தளபதி ஆகவும், சின்ன மருதுவை மந்திரியாகவும் பணிக்கு அமர்த்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலுநாச்சியாருக்கும், நவாப் மந்திரிக்கும் இடையில் ஒப்பந்தமானது போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிவகங்கை சீமையை விட்டு மருந்து சகோதரர்கள் விலகிசெல்ல வேண்டும். தனது பிள்ளைகளாய் இருந்த மருது சகோதரர்கள் தன்னோடு முரண்டு பிடித்துபோனது காலக்கொடுமையாக இருந்தது.

நாம் பிரிந்திருந்தாலும் சிவகங்கையை வேறுயாரும் ஆளக்கூடாது என்பது தான் வேலுநாச்சியாரின் எண்ணமாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து மருது சகோதரர்கள் ராணியின் அழைப்பை ஏற்று சிவகங்கை சென்றனர். மக்கள் மனதில் எப்போதுமே நிலைத்துவாழும் வேலுநாச்சியார் 23/12/1796-ஆம் வருடம் இறந்தார். இந்திய வரலாற்றிலேயே கணவன் இறந்தும் உடன் கட்டை ஏறாமல் தனது கணவனை கொன்றவனை நான் கொல்லாமல் சாகமாட்டேன் என்று சவால் விட்டவர் வேலு நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் முதலாக போர் கொடுத்த வீரப் பெண்மணி இவரே ஆவார். பல பெண்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக வீரப்பெண்மணி வேலு நாச்சியார் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |