செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பள்ளியில் பாலியல் மாணவி உயிரிழந்ததற்கு முதல்வர் வீடியோ வெளியிட்டதற்கு அந்தப் பொறுப்பு அவசியம் தான், அதை நாம் மதிக்க வேண்டும், அவர் சொல்கிறார் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகும் சொல்கிறேன் என்று, அது எல்லாரும் வருத்தம் இருக்கிறது. இன்னும் பிள்ளைகளால் வந்து தேர்வில் தோற்று போவதையே தாங்குகின்ற முதிர்ச்சி இருக்க மாட்டேங்குது, இது வந்து மிகப் பெரிய மன உளைச்சலில் இருக்கும்.
சமூகத்தை வந்து தேர்வில் தோற்றுப் போகிற பிள்ளைகள் நீட்டில் தோற்றுப் போகிற பிள்ளைகள் சமூகத்தை எதிர்நோக்குவதற்கு கூச்சப்படுகிறார்கள், அதனால்தான் நம் பிள்ளைகள் வந்து உயிரை மாய்கின்றது வருகிறது. அதுவும் இந்த மாதிரி பாலியல் தொந்தரவு வந்து யாரிடம் சொல்லுவது, அந்த மன உளைச்சல் போய் தான் நம் பிள்ளைகள் இந்த மாதிரி முடிவெடுக்கிறார்கள்.
அதை முதல்வராக அவர் ஒரு தந்தையாக இருந்து நான் சொல்கிறேன் நீங்க அந்த முடிவுக்கு வராதீர்கள் இதை தடுப்போம் என்கிறது சரிதான். ஆனால் சட்டம் ஒழுங்கை இன்னும் சரி பண்ண வேண்டும், சரி பண்ணனும் என்றால் யாரை நம்பி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது ? ஆசிரியரையா பேராசிரியரையா அவர்களிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் அது பெரிய மன உளைச்சலை கொடுத்துவிடும்.
அது தான் இது, அவர் சொன்ன அந்த பொறுப்புணர்வை நான் வரவேற்கிறேன், அதை பாராட்டுகிறேன். அதற்கு இணையாக சட்டம்-ஒழுங்கு, ஏனென்றால் ஒரு உதவி ஆய்வாளரை கொலை செய்கின்ற அளவிற்கு இருக்கிறது, 3 ஆடு திருடர்கள் வெட்டி கொலை செய்கிறார்கள் என்றால் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் பயனில்லை. அதனால் கவனமாக செய்ய வேண்டும் அந்த பொறுப்பை நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.
தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சீமான் ஸ்டாலினை பாராட்டியது திமுகவினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.