Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சரியாக பணம் கிடைக்கிறதா?…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மூலங்குடி, சித்தனங்குடி,நீடாமங்கலம்  ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரியின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் வீடுகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதில் மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சடையப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, சிவகுமார், நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகள் நடைபெறுகிறதா? கட்டுமான பொருட்களின் தரம்   குறித்தும்  ஆய்வு செய்தார். இதனையடுத்து  பயனாளிகளிடம் வீடு கட்டுவதற்கான தவணை தொகை வங்கியின் மூலம் வங்கி கணக்கில்  சரியாக வரவு வைக்கப்படுகிறது என கேட்டு அறிந்துள்ளார்.

Categories

Tech |