நீங்கள் சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா என தெரிந்துகொள்ள விவிபாட் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில் வாக்கு செலுத்திய பிறகு விவிபாட் இயந்திரத்தில் உங்களின் வேட்பாளர் பெயர், வரிசை எண், சின்னம் 7 வினாடிகள் தோன்றும். நீங்கள் வாழ்க்கை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் புதிதில்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.