காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் இருக்கும் இளங்கோவடிகள் தெரு, சாலை தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்து பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.