Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரியாக 9.30க்கு தொடங்குது….. வரலாற்றில் இதுவே முதல் முறை…. வெளியான ருசிகர தகவல் …!!

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில், பிரத்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஹனுமா விகாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், மொகமத் சஷி, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டியை சந்திக்க உள்ளது இதுவே முதல் முறை. ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும், 20 ஓவர்கள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியாவும் கைப்பற்றியுள்ளது.

இதுவரை வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. அதுவும் கடந்த 2018-19 ல் கோலி தலைமையிலான டெஸ்ட் தொடர் தான். எனவே,  4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முடிவு என்னவாக இருக்கும் என இருநாட்டு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |