Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் கொடுக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சதீஸ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தனது செலவுக்காக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டனர். ஆனால் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |