சரியாக சம்பளம் கொடுக்காத காரணத்தினால் அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கனூர் அருகே உள்ள கோமளவல்லி பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். 56 வயதாகும் இவர் அரசு சார்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் சம்பளம் வழங்கப்படாததால் சௌந்தர்ராஜன் குடும்பம் நடத்தவே கடும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சௌந்தர்ராஜன் சம்பவத்தன்று எலி பேஸ்ட் தின்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த சௌந்தரராஜன் குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சௌந்தர்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.