Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சரியா பாக்கலையா.! அவுட் கொடுத்த அம்பயர்…. சர்ச்சையாகும் எல்.பி.டபிள்யூ…. கொந்தளிக்கும் ரசிகர்கள்….. வைரல் வீடியோ..!!

வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்து விட்டது. கடைசியாக 3 போட்டிகள் நடந்தது. இதில்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.. பின்னர் அதே மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் வெற்றி பெறும் அணி கட்டாயமாக அரையிறுதிக்கு  செல்லும் என்பதால் போட்டி பரபரப்பாக நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஷாண்டோ 48 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போட்டியின் 10ஆவது ஓவரை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷதாப் கான் வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் சௌமியா சர்க்கார் 20 ரன் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் குவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து வந்த வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 5ஆவது பந்தை எதிர்கொண்டார். அந்தப் பந்தில் ஷகிப் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். சதாப்கான் அம்பெயரிடம் அவுட் கேட்க அவர் கொடுத்தார். அதன்பின் எடுத்து ஷகிப் ரிவ்யூ கேட்டார். இதையடுத்து மூன்றாவது நடுவர் டிவி ரிப்ளையில் பார்க்கும்போது, பேட்டில் பந்து உரசி சென்றது தெரிந்தது. அதேபோல பேட்டிற்கும், தரைக்கும் சிறிது இடைவெளி இருப்பதும் தெளிவாக தெரிந்தது.

இருப்பினும் 3ஆவது நடுவர் அவுட்கொடுத்தார். இதனால் சற்று மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த நடுவரிடம் வாக்குவாதம் செய்தார் ஷகிப்.. இதனால் சமூக வலைதளங்களில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் ‘நாட் அவுட்’ என்று ஹேஸ்டேக் உருவாக்கி அம்பெயருக்கு எதிராக தங்களது கருத்துக்களை ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இப்படி மிக முக்கியமான போட்டியில் அம்பெயர் இப்படி கவனக்குறைவாக செய்லபடலாமா என்று விமர்சித்து வருகின்றனர்..

இதற்கு முன் ஒரு போட்டியில் ஷகிப் அல் ஹசன் கோபத்தில் ஸ்டம்பை தூக்கி எறியும் காட்சிகளை பதிவிட்டு இன்றைய ஆட்டத்தில் இதை அவர் செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வருகிறது. டி20 உலக கோப்பையில் குரூப் 1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/MaxxGautam18/status/1589125442774372352

https://twitter.com/12th_khiladi/status/1589120800506150912

https://twitter.com/hamxa_rajpoot/status/1589125228017635328

Categories

Tech |