ஆவின் மேலாளரை காவலாளி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சவூர் மாவட்டத்தில் இருக்கும் நாஞ்சிக்கோட்டை அருகே ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் வயது (27) பணியாற்றி வருகின்றார்.இதே நிறுவனத்தில் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்த அன்புநாதன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் . இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வரவில்லை அதனால் மேலாளர் திருமுருகன் அவரை கண்டித்துள்ளார்.
இருப்பினும் அவர் தொடர்ந்து சரிவர வேலைக்கு வராமல் இருந்ததால் திருமுருகன் மேலிடத்திற்க்கு புகார் அளித்துள்ளார்.அதனால் அன்புநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதைத்தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் அன்புநாதன் அதன் வேலைக்கு வந்துள்ளார். இதனால் திருமுருகன் அவரை தடுத்து திருப்பி அனுப்ப முயன்றார் .அச்சமயம் அன்புநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருமுருகனை குத்தி விட்டு தப்பி ஓடினார். திருமுருகனை அக்கம்பக்கத்தில் இருத்தவர்கள் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இது குறித்து தஞ்சை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பு நாதனை கைது செய்தனர்.