Categories
மாநில செய்திகள்

சரியா வேலை செய்யலன்னா…. மாடு மேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு…. பா.ம.கவினரை பதறவிட்டார் ராமதாஸ்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மாடுமேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு வழங்கப் போவதாக கூறி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.இதனால் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும்.

இதற்காக திண்ணைப் பிரச்சாரம், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உட்கட்சிப் பிரச்சினையால்தான் கடலூர் மாவட்டத்தில் தோல்வி அடைந்தோம். கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியவில்லை என்றால், மாடுமேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தலிலும் விலை போனவர்களால் தோல்வி அடைந்தோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது கட்சி உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |