Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சரிவிகித உணவு உட்கொள்ள விழிப்புணர்வு…. ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைத்த ஆட்சியர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சார்பில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து மக்களுக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஒட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஸ்டிக்கர் மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களில் முதல்முறையாக ஒட்டப்பட்டது. அதுமட்டுமல்லாது அந்த தனியார் குடிநீர் ஆலையின் உரிமையாளர்களுக்கும் மற்ற கேன்களில் ஒட்டுவதற்காக ஸ்டிக்கர்களையும் அவர் வழங்கினார். இதனால் அனைத்து மக்களும் சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

Categories

Tech |