முகத்தில் அதிகமான பருக்கள், சுருக்கம், கருமை வருவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முகம் மற்றும் சரும பராமரிப்பிற்காண எளிய குறிப்புகள்:-
ஓட்ஸ் 1 ஸ்பூன் எடுத்து, முந்தின இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தயிருடன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து சுத்தமான நீரால் கழுவவும்.
உருளைகிழங்கு 1 எடுத்து வேகவைத்து, தோல் நீக்கி, அரைத்து பாதம் எண்ணெய் (அ) பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகத்திற்கு பொலிவு உண்டாக்கும்.
தேவையான அளவு புதினாவை எடுத்து அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகத்திற்கு அழகு உண்டாவதுடன் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.
ஆரஞ்சு பழ தோலை எடுத்து, நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து, அதில் 2 ஸ்பூன் எடுத்து, அதனுடன் 1 கப் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருக்கும்.
10 பாதாம் பருப்பை எடுத்து இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும்.
வாழைப்பழம் 1 எடுத்து, அதனுடன் 1 கப் தயிர் கலந்து நன்கு மசித்து, தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.
தேனுடன், சமபங்கு, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவ 10 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் முற்றிலும் நீங்கி விடும்.
வெள்ளரிபிஞ்சை நன்கு அரைத்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால், பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி தோல் மென்மையாகும்.
கடலைமாவு 2 ஸ்பூன், பால், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும்.
மஞ்சள்தூள், கோதுமை மாவு, நல்லெண்ணெய் சேர்த்து உடலில் தேவையற்ற இடங்களில் முடிவளரும் இடத்தில் தடவினால், உடனே முடிகள் நீங்கி விடும்.