உங்கள் சருமத்தில் உள்ள அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வேப்ப எண்ணையை பயன்படுத்தி பாருங்கள்.
முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள், முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கின்றன. தூசு, அழுக்கு போன்றவை நம் முகத்தில் படும்போது, முகத்தில் உள்ள நுண்துளைகள் அடைபட்டு, கிருமி தொற்றின் காரணமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்ய, வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படும். மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும். வேம்பம் பூ மற்றும் வேப்ப எண்ணெய்யை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருதயம் மற்றும் கல்லீரலுக்கு பலம் சேர்க்கும்.