Categories
லைப் ஸ்டைல்

சரும பிரச்சனை முதல் மூல நோய் பிரச்சனை வரை…. அனைத்திற்கும் நிரந்தர தீர்வு… இந்த ஒரு பழம் போதும்…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் நட்சத்திரப் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இதுவே தீர்வாக அமையும்.

அதன்படி நட்சத்திர பழம் பல நோய்களுக்கு அருமருந்தாக அமைகிறது. இது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை கொண்டது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கசடுகள் வெளியேறும். தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த பழம். பால் சுரப்பை அதிகரிக்கும். அஜீரண கோளாறு வாயுவின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோய் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திர பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.

மழைக் காலங்களில் உள்ள சரும பிரச்சனைகளுக்கு இந்த பழம் சிறந்த தீர்வு அளிக்கும். இந்த பழத்தினை உண்ணும்போது சருமமானது நீர்ச்சத்துடன் சுருக்கங்கள் மற்றும் பருக்களின்றி பளபளப்பாக காணப்படும். மேலும் தாது உப்புக்கள், நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி வலுப்படுத்தும். எடையைக் குறைக்க இது மிகவும் உதவுகிறது. இதனை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குறிப்பாக ரத்த ஓட்டம் சீராகும்.

Categories

Tech |