Categories
தேசிய செய்திகள்

சர்க்கரைக்கு பதில் எலி மருந்து…. தாயின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்…. சோகம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேத்தூர் என்ற கிராமத்தில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து பாலை காய்ச்சி அதில் கலந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்தனர்.

ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது உண்மையிலேயே கவனக்குறைவால் நடந்ததா, இல்லை வேறு ஏதாவது நடந்துள்ளதா என்ற சந்தேகத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |