சர்க்கரைவள்ளிக் கிழங்கு – அரை கிலோ
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, பின் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுடன், மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனை தொடர்ந்து, நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை, ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன், கலந்து வைத்துள்ள கலவையை அதன் மீது தூவி நன்றாக கிளறவும். இறுதியாக அதன்மேல், சாட் மசாலா தூள் தூவி பரிமாறினால் சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் ரெடி.