கரும்புக்குரிய சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிறப்பு ஊக்கத்தொகையாக ரூபாய்.195 வழங்கப்படும். இதன் வாயிலாக சுமார் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.