சர்க்கரை நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடுவது சர்க்கரை வியாதியை கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் கொய்யா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது மிக சிறந்ததாக இருக்கும். பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த பழம் மிகச் சிறந்தது. கொய்யாப்பழத்தை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
கொய்யாப்பழத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் உண்டு வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும். கொய்யாப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால் தினமும் உண்ணும் போது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. தினமும் இதனை சாப்பிடும் போது உங்களது உறவுகள் எப்போதும் இனிமையாக இருக்கும் .
கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகக் குறைவு. கொய்யாப்பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்ளும் போது ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.