சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர்.
சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும்.
சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் ஊறவைத்து ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
ஜீரண பாதையில் உள்ள புண்கள், வயிற்றுக்கோளாறு, அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த சப்ஜா விதைகள் நல்ல பயன்களைத் தருகின்றது.