தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி சர்க்கரை நோயை குணப்படுத்த எளிய மூலிகை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. முனிவர் இலை தாவரம் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 டயாபடீஸ் கட்டுப்பாட்டில் வைக்கவும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் இது உதவுகிறது. கல்லீரல் வேலையை துரிதமாக்குகிறது. இதன் இலைகளைத் தேநீர் தயாரித்தோ அல்லது காயவைத்து பவுடர் ஆக்கி சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடி போய் விடும்.
அடுத்ததாக சிறுகுறிஞ்சான் இலையும் சர்க்கரை நோய்க்கு மூலிகையாக பயன்படுகிறது. இதற்கு சர்க்கரை அளிப்பான் என்று பெயர் உண்டு. இவை நாவின் சுவை நரம்புகள் கட்டுப்படுத்தி இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதை குறைகிறது. மேலும் இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது. இதன் இலைகளை கொதிக்க வைத்து வடிகட்டி யோ அல்லது காயவைத்து பவுடர் ஆக்கி சாப்பிடலாம். இவ்வாறு செய்து வந்தால் சர்க்கரை நோய் விரைவில் குணமாகும்.