Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை வியாதியை விரட்டியடிக்க…” வாரம் ஒரு முறை இந்த சூப் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக பயன்படும் பாகற்காய் சூப் வாரம் இருமுறை சாப்பிட்டால் மிகவும் நல்லது. இது எப்படி செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

தேவையானவை:

கசப்பு அதிகம் இல்லாத சின்ன சைஸ் பாகற்காய் – 50 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், உப்பு – சிறிது, எண்ணெய் – சிறிதளவு.

தாளிக்க:

வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பாகற்காயை நன்கு கிளறி விட்டு உப்பு மஞ்சள் சேர்த்து நீரில் வேகவைத்து எடுக்கவும். பாசிப்பருப்பில் சிறிது நீர் சேர்த்து தனியாக வேக வைத்து மசித்துக் கொண்டு பின்னர் பாகற்காய் நீரை கலக்க வேண்டும்.  கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, சீரகத்தூள் போட்டு பாசிபருப்பு பாகற்காய் கலந்த கலவையை விட்டு சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கவேண்டும்.

இதன் பயன்கள்

பாகற்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம், வைட்டமின் சத்துக்கள் உள்ளது.  இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கவும் இது பயன்படுகிறது. உடலில் உள்ள புழுக்கள், பூச்சிகள் வெளியேற்ற இது மிகவும் சிறந்தது. குழந்தைகள் அதிக அளவில் இனிப்பு பண்டங்களை சாப்பிடுவார்கள். அதனால் வயிற்றுக் குடலில் புழுக்கள் தங்கியிருக்கும். அதனை வெளியேற்ற இந்த பாகற்காய் சூப் மிகவும் அருமருந்து.

Categories

Tech |