சேலம் மாவட்டத்தில் உள்ள காமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கௌரவ் என்பவரிடம் மோகன் குமார் 30 டன் சர்க்கரை வாங்குவதற்காக அவர் கூறிய வங்கி கணக்கில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 175 ரூபாயை செலுத்தியுள்ளார்.
ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமலும், சர்க்கரை அனுப்பாமலும் கௌரவ் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் மோகன்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கௌரவின் வங்கி கணக்கை முடக்கி 5 லட்ச ரூபாயை மீட்டு மோகன் குமாரிடம் ஒப்படைத்தனர்.