Categories
சினிமா

சர்ச்சைகளின் நாயகி மீரா மிதுன்…. கோர்ட்டுக்கே டிமிக்கி…. பிடிவாரண்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்….!!

பழங்குடி சாதியினரை இழிவாகப் பேசியதாகக் கூறப்பட்ட  நடிகை மீராமீதுனின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன.

இதையடுத்து  வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது . பின்னர்  கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே  இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி  வெளியில் இருக்கும் நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் மூலம் மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம்  ஏப்ரல் 4ஆம் தேதி நடிகை மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.

 

Categories

Tech |