இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் ட்விட்டர் நிறுவனமே அவரது கணக்கை முடக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் திருந்தாமல் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திய சுதந்திரம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த அவர், பிரிட்டிஷ் ஆட்சியை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றது எனவும் கடந்த 2014ஆம் ஆண்டு தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது எனவும் 1947 ஆம் ஆண்டு பெறப்பட்டது வெறும் பிச்சைதான் எனவும் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கங்கனா ரனாவத்திற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
மேலும் காந்திஜி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களின் தியாகங்களை கங்கனா ரனாவத் இழிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதுபோன்று அவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வருவதால் அவருக்கு மன நல மதிப்பீடு செய்ய வேண்டுமெனவும் கூறினார். கங்கனா ரனாவதின் இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருண்காந்தி சுதந்திர போராட்ட வீரர்களைகங்கனா இழிவுபடுத்தி உள்ளதாக சாடினார். மேலும் இந்திய சுதந்திரத்திற்காக போராடியாவர்களை மக்கள் மறக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.