நடிகர் ஷாருக்கான் தன் மகளுடன் பதான் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்ததலைவரும் மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவருமான கிரிஷ் கெளதம் தெரிவித்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை அடுத்து “பதான்” பாடலில் காவி நிற உடையணிந்தது தொடர்பாக சட்டப்பேரவை தலைவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பதான் திரைப்படத்தில் ”பேஷாரம் ராங்” என்ற பாடலில் ஷாருக்கானுடன் காவி உடையணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தலைவர் கிரிஷ் கெளதம் பேசியதாவது, ஷாருக்கான் தன் மகளுடன் பதான் படத்தை பார்க்க வேண்டும்.
திரையரங்க புகைப்படத்தை பதிவிட்டு தன் மகளுடன் படம் பார்த்ததை ஷாருக்கான் உலகத்துக்கு சொல்ல வேண்டும். ஆனால் இது கட்டாயம் ஏற்கதக்கதல்ல. பொது வெளியில் இந்திய பெண் இவ்வாறு உடை அணிந்து மற்றவர்கள் முன் நிற்பதை எந்த மதத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் ஏற்கமுடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செளரி குறிப்பிட்டுள்ளார்..