Categories
Uncategorized தேசிய செய்திகள்

சர்ச்சை ஆடியோ விவகாரம்: நாங்க அக்கா-தம்பி போல் பழகுறோம்!…. டெய்சி, சூர்யா கொடுத்த விளக்கம்…..!!!!!

பாஜக-வில் சர்ச்சை ஆடியோ வெளியாகிய விவகாரத்தில் டெய்சி சரண், சூர்யாசிவா போன்றோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நிரூபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது “அண்மையில் வெளியாகிய ஆடியோ விஷயம், எதிர்க் கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். எனினும் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டுவந்து விட்டோம்.

இவற்றில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. இதற்கிடையில் பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் நாங்கள். இந்த ஆடியோ சம்பவமானது கண்பட்டது போல் அரங்கேறி விட்டது. தனிப்பட்ட முறையில் இருப்பினும், பொதுதளத்தில் இருந்தாலும் ஆடியோ வெளியானதால் இருவரும் எங்களுடைய கருத்தை தெரிவித்து விட்டோம். எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்து விட்டோம்.

எங்களது தரப்பிலிருந்து ஆடியோவானது வெளியாகவில்லை. அது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தணிக்கை செய்துவருகிறது. நாங்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்பதால், குடும்பமாக பழகிவந்தோம். அத்துடன் அக்கா, தம்பியாக பழகுகிறோம். இதன் பிறகும் அதே நிலை தொடரும். ஆடியோ விவகாரம் ஒரு அசாம்பாவிதம்தான். இதனிடையில் கே.டி.ராகவன் இன்று வரை கட்சிபணியை தொடரவில்லை” என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |