அண்மையில் மதுரையில் நடந்த விருமன் திரைப்படம் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் சூரி பேசினார். அதாவது அவர் எதேச்சையாகக் கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என்று பேசியதாக சமூகவலைத்தளங்களில் விடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு ஹிந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள்ள ராசாக்கூரில் கோயில் திருவிழா நடைபெற்றது.
அந்த திருவிழாவில் நடிகர் சூரி பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் விடியோவை அவரது சொந்த ஊர்க்காரர்கள் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதில் அவர்களின் கருத்தாக கூறியிருப்பதாவது “நடிகர் சூரி சுவாமி பக்திக்கும், கோவிலுக்கும், ஆன்மீகத்திற்கும் எதிரானவர் அல்ல. அவர் கடவுள் நம்பிக்கை இருப்பவர். அவருடைய குடும்பம் ஒரு சாமியாடி குடும்பம் என்பதைக் கருத்தாகப் பதிவிட்டு உள்ளனர். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.