நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடக மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்கிருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி அளித்து கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் அனுமதி கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.