பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருகின்ற திரைப்படம் சர்தார். இந்தப் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளி ன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா,ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ் காந்த் மாஸ்டர் ரித்விக் அவினாஷ் முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை அடுத்து இந்த பாடத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றார். இந்த சூழலில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை ஜிவி பிரகாஷ் வெளியிடுகிறார். அதன்படி சர்தார் திரைப்படத்தின் முதல் பாடலான ஏறுமயில் ஏறி என்னும் நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடி இருக்கின்றார் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
Categories