இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்.,) கீழ் 111 நிறுவனங்கள், 71 மத்திய, மாநில வேளாண் பல்கலைகள் நாடு முழுதும் செயல்படுகிறது. வேளாண் பல்கலைகள், ஐ.சி.ஏ.ஆர்., நிறுவனங்கள், விஞ்ஞானிகள், விவசாயிகளின் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் அடிப்படையில் வருடந்தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிறப்பாக செயல்படும் பல்கலைகள், நிறுவனங்களுக்கு “சர்தார் படேல்” விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடப்பு ஆண்டுக்கான விருது, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியிருப்பதாவது, வளங்களின் ஒதுக்கீடு, முதன்மை வெளியீடுகள், அறிவியல் தொழில் நுட்பம், தேசிய தேர்வுகளில் மாணவர்கள் திறன், வேலைவாய்ப்பு, வளங்களை திரட்டுதல், தேசிய, சர்வதேச அளவில் ஆசிரியர் விருதுகள், அங்கீகாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்யப்படுகிறது. இவற்றில் 374 தேசிய நிதியுதவி பெற்றது. உயர்கல்வியில் மாணவர்களை ஈர்ப்பதில் 71 மத்திய, மாநில வேளாண் பல்கலைகளில் முதலிடம், ஆராய்ச்சியில் 74 மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகள், 2,000 ஸ்கோபஸ் குறியீட்டு அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றின் அடிப்படையில் வேளாண் பல்கலைக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.